இஷாந்த்சர்மா தந்த திருப்புமுனை கடைசி வரை திக்... திக்.... சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்தியா! #throwback

0 6438

கடந்த 2013 - ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்ற தினம் இன்று. கடைசி வரை பரபரப்பாக ரசிகர்களை  நகம் கடிக்க வைத்து, சீட் நுனியில் அமர வைத்த போட்டி இது.  2007 - ல் டி20 உலகக் கோப்பை, 2011 - 50 ஓவர் உலகக் கோப்பையைத் தொடர்ந்து 2013 - ல் நடந்த சாம்பியன் டிராபியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.  இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐசிசியின் மூன்று முக்கிய தொடர்களில் கோப்பையை கைப்பற்றிய  கேப்டன் என்ற  சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்தார். 

image

சிசி இந்த போட்டி குறித்து ட்விட்டரில் இந்திய அணியின் வெற்றி குறித்து கீச்சு ஒன்றைப் பதிவிட்டு முக்கியமான நிகழ்வுகளைப் பகிர்ந்திருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டு முறை சாம்பியன் டிராபி கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் சேர்ந்தது. அந்தப் போட்டியில் இந்தியா வீழ்த்த முடியாத அணியாக வலம்வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதன் மூலம் தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது . முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் ஷிகர் தவான் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார்.  அடுத்ததாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீட்லடிங்கை தேர்ந்தெடுத்தது.  மழை காரணமாகப் போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் 39.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை குறுக்கிட 22 ஓவர் குறைக்கப்பட்டு 102 ரன்கள் இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 19.1 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மழை குறுகிய D/L விதிப்படி இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரையிறுதியில் இந்திய அணி இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

image

இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட 20 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை  தேர்வு செய்தது. சாம்பியன் டிராபி தொடர் முழுவதுமே ஃபார்மில் இருந்த இந்திய அணி அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் 129 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டும் 43 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து நிதானமாக ரன் குவித்துக்கொண்டிருந்தது. இங்கிலாந்து எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களத்தில் நிலைத்து ஆடிய ரவி போபரா மற்றும் மோர்கன் விக்கெட்டை  இஷாந்த் சர்மா ஒரே ஓவரில் வீழ்த்தினார். ஆட்டத்தின் போக்கு மாறியது. ஆட்டம் எளிதாக இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஷ்வின் மிகச்சிறப்பாகப் பந்து வீசி,  இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார். கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்வில் மறக்க முடியாத போட்டியாக சாம்பியன் டிராபியன்ஸ் டிராபி  இறுதிப் போட்டி அமைந்திருந்தது.இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ரவிந்திர ஜடேஜாவும் தொடர்  நாயகன் விருதை 363 ரன்களை குவித்த ஷிகர் தவானும் தட்டிச் சென்றனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments