கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஊதியம் அளிக்க முடியும் ? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

0 4199

கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இதேபோல் மாணாக்கர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊதியத்தை முறையாக வழங்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி ஊதியம் வழங்க முடியும்?

ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிவிட்ட நிலையில், எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் மனு குறித்து ஒரு வாரத்தில் பதில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments