மதுரையில் கடைவீதிகளில் குவியும் மக்கள்

0 7107
நள்ளிரவு தொடங்கும் ஊரடங்கு

மதுரையில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைவீதி மற்றும் காய்கறிக் கடைகளில் தனிநபர் இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகளின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்தது. 

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைப் போன்றே மதுரையிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை பரிசீலனை செய்த அரசு செவ்வாய்கிழமை நள்ளிரவு தொடங்கி வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கை அறிவித்தது. இருப்பினும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை நேரக்கட்டுப்பாட்டுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் கீழமாசி வீதியில் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்க தனிநபர் இடைவெளியின்றி மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதேபோல் காய்கறிக் கடைகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. மதுரை சர்வேயர் காலனி பகுதியில் தற்காலிகமாக அமைந்திருக்கும் காய்கறி சந்தையில் அதிகாலையிலேயே காய்கறி வாங்க கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் குவிந்தனர். அண்ணா நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசங்கள் அணியாமலும் காணப்பட்டனர். அதிலும் பலர் ஆபத்தை உணராமல் குழந்தைகளையும் சந்தைக்கு தூக்கி வந்திருந்தனர்.

இதனிடையே காய்கறி விலையும் கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. கிலோ 40 ரூபாய்க்கு விற்ற உருளைக்கிழங்கு 65 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோ 12 ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும் 55 ரூபாய்க்கு விற்பனையான கேரட் 85 ரூபாய்க்கும் விற்பனையானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments