பொருளாதாரத்தை பாதிக்காத கட்டுப்பாடுகளை அமல்படுத்த கர்நாடக அரசு உத்தரவு

0 3213
அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க எடியூரப்பா அவசர ஆலோசனை

பெங்களூரில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் எடியூரப்பா, கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

கே.ஆர்.மார்க்கெட், சித்தபுரா, விவிபுரம், கலசிப்பாளையா உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை தளர்வில்லாமல் அமல்படுத்தவேண்டும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கொரோனா பாதிப்புடைய தெருக்களை அடைப்பதுடன் அருகில் உள்ள தெருக்களையும் அடைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யவும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும், அனைத்து வார்டுகளிலும் காய்ச்சலுக்கான சுகாதார மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை பாதிக்காதவகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments