இந்தியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை அமெரிக்கா முறியடித்தது

0 7370
பாக்.திட்டத்திற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை

இந்தியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சித்தரிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை அமெரிக்கா முறியடித்தது. 

ஆப்கானிஸ்தானில் பொறியாளரகாப் பணியாற்றும் வேணு மாதவ் டோங்கரா என்ற இந்தியரை, பாகிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி இந்தியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக சித்தரிக்க பாகிஸ்தான் ஒரு தீர்மானத்தை சீனாவின் ஆதரவுடன் கொண்டு வந்தது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த தீர்மானத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்து மேலும் ஆதாரத்தைத் தருமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியது.

வேறு ஆதாரத்தை பாகிஸ்தான் தர முடியாத நிலையின் காரணமாக அந்த தீர்மானத்தை தடை செய்து பரிந்துரைப் பட்டியலில் இருந்து நீக்கி விடுவதாக அமெரிக்கா அனைத்து உறுப்பு நாடுகளிடமும் தற்போது அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments