உலக அளவில் ஒரே நாளில் 1.38 லட்சம் பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று

0 967

உலக அளவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவே முதலிடத்தில் இருந்தாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஏனைய நாடுகளை விட மோசமான முன்னுதாரணமாக மெக்ஸிகோ உள்ளது. அங்கு நேற்று மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெருந்தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 748 பேர் இறந்ததால் பிரேசில் 2ம் இடத்திலும், 363 பேர் உயிரிழந்ததால் அமெரிக்காவும், 312 பேர் மரணித்ததால் இந்தியா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 31 ஆயிரத்து 500 பேருடன் அமெரிக்காவும், 24 ஆயிரம் பேருடன் பிரேசில் 2ம் இடத்திலும், 13 ஆயிரத்து 500 பேருடன் இந்தியா அடுத்த இடத்திலும் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments