ஒடிசா மாநிலத்தில் நேற்று மாலை மிதமான நிலநடுக்கம்

0 484

ஒடிசா மாநிலத்தில் நேற்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவில் அண்மைக்காலமாக குறைந்த மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ராயகடா மாவட்டத்துக்குட்பட்ட காசிபூரில் ஏற்பட்ட நில நடுக்கம் மாநிலத்தின் வேறு சில இடங்களிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுவர்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

எனினும் காயம், சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை மிசோரம் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் இரு முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் ஒடிசா மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments