புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நெபுலாக்கள் படத்தை வெளியிட்டது நாசா

0 8499
பட்டாம்பூச்சி, நகைப் பெட்டி எனப் பெயர் கொண்ட நெபுலாக்கள் படம் வெளியானது

நாசா விஞ்ஞானிகள் புதிய நெபுலாக்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பால்வெளி மண்டலத்தை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது புதிய நெபுலாக்கள் படம் பிடிக்கப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 392 ஒளி ஆண்டுகள் தொலைவில் பட்டாம்பூச்சி மற்றும் நகைப் பெட்டி என்று பெயரிடப்பட்ட நெபுலாக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதேபோல் என் ஜி சி 7027 என்ற மற்றொரு நெபுலாவையும் விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். இந்தப் படங்கள் மூலம் நெபுலாக்கள் எப்படி உருவாகின்றன என்றும், எப்படி வினோத உருவங்களைப் பெறுகின்றன என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்கு உதவியாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தூசு, ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களான ஆன மேகக் கூட்டங்களே நெபுலாக்கள் எனப்படுகின்றன. இவை பால்வெளி மண்டலத்தில் ஆங்காங்கே காணப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments