ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

0 762

ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவின் ஏழை எளிய மக்கள் பலரும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளதாக அதில் சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உணவு தானியங்களை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து செப்டம்பர் வரை வழங்க வேண்டும் என்று பல மாநிலங்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments