சிறப்பு ரயில்களுக்கான உச்சபட்சத் தேவைக்காலம் முடிவு

0 2100
தற்போது 15 ரயில்களுக்கு மட்டுமே தேவை உள்ளது - ரயில்வே

சிறப்பு ரயில்களுக்கான உச்சபட்சத் தேவைக்காலம் முடிவடைந்து விட்டதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.

மே ஒன்றாம் தேதி முதல் கொரொனா ஊரடங்கால் பிற மாநிலங்களில் சிக்கித் தவித்த 62 லட்சம் தொழிலாளர்கள் 4,436 சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் விடத் தொடங்கிய காலத்தில் நாளொன்றுக்கு 269 ரயில்கள் விடப்பட்ட நிலையில், தற்போது ஆறு முதல் 7 ரயில்கள் மட்டுமே விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களுக்கான தேவை குறித்து தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ள நிலையில், 15 ரயில்கள் மட்டுமே கோரப்பட்டிருப்பதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தைச் அனைத்து மாநிலங்களும் நிலுவையின்றிச் செலுத்திவிட்டதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments