புதுவாழ்வு தரும் பிளாஸ்மா..! மருத்துவ உலகில் ஓர் அதிசயம்

0 8610
சென்னையில் 13 கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை

மருத்துவ உலகில் ஓர் அதிசயமாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள பிளாஸ்மா தெரபி சிகிச்சையின் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  விரைந்து குணமாகி வருகிறார்கள். இதனால், வாழ்க்கையின் எல்லை வரை சென்றவர்களுக்கு, புதுவாழ்வு கிடைத்துள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்கு, பிளாஸ்மா சிகிச்சை, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடையும் ஒரு நோயாளியின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதால், அவர்களின் ரத்த அணுக்களை தானமாக பெற்று, வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் உடலில் செலுத்தப்படும். இதன் மூலம், கொரோனா நோயாளிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் தொற்று முழுமையாக அழிக்கப்படும்.

சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதற்கட்டமாக 13 கொரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் மத்தியில், தற்போது நல்ல விழிப்புணர்வு உள்ளதால், கொரோனாவின் பிடியில் இருந்து மீண்ட பலர், தாங்களாகவே முன் வந்து, இரத்த அணுக்களை தானம் செய்ய முன்வருவதாக சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கியின் தலைவர் சுபாஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில், சென்னை - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, வேலூர் சி எம் சி, திருநெல்வேலி மற்றும் மதுரை மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர் என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சூழலில், பிளாஸ்மா சிகிச்சை, கொரோனா நோயாளிகளுக்கு ஓரு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் எல்லை வரை சென்றவர்களுக்கு, இதன் மூலம் புதுவாழ்வு கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments