விமான பணியாளர்கள் ’ஆரோக்கிய சேது’வை தரவிறக்கம் செய்ய உத்தரவு

0 1028
கொரோனா அறிகுறி உள்ள விமானப் பணியாளர்களுக்கு 14 நாள் வீட்டுத் தனிமை

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், விமானிகள் உள்ளிட்ட விமான பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய  வேண்டும் என விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அறிகுறிகள் காணப்படும் விமான பணியாளர்களுக்கு இதை பதிவிறக்கம் செய்வத் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்கள் அல்லது கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த விமான பணியாளர்கள் அனைவரும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் எல்லா விமான நிறுவனங்களும், தங்களது மருத்துவர்கள் வாயிலாக விமானப் பணியாளர் குழுவை பரிசோதிப்பதும் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments