முழு ஊரடங்குக்குப் பின் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் - சென்னை மாநகராட்சி ஆணையர்

0 2611

12 நாள் முழு ஊரடங்கிற்குப் பின் சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீடுவீடாகச் சென்று பரிசோதனைகள் செய்வது, மருத்துவ முகாம்கள் நடத்துவது எனப் பல வகையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

200 கோட்டங்களிலும் நாள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments