சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை... 16 நாளில் 8 ரூபாய்க்கு மேல் உயர்வு!

0 1838

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து 16 - வது நாளாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று, பெட்ரோல் விலை 29 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 82.87 ரூபாய்க்கும், டீசல் 76.30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த 16 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் 9.21 ரூபாயும், டீசல் விலை சுமார் 8.55 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட் ஆகியவற்றின்  பரிந்துரைப்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

image

மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இது 16 நாட்களுக்கு முன்னர் திரும்ப பெறப்பட்டது. ஜூன் 7 ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது.  பெட்ரோல் விலையில் 64 %, டீசல் விலையில் 63 % ம் வரியாக வசூல் செய்யப்படுகிறது.  அதாவது நாம் செலுத்தும் பெட்ரோல், டீசல் விலையில் மூன்றில் ஒரு பங்கை வரியாகச் செலுத்துகிறோம்.

மார்ச் மாதம் 14 - ம் தேதி  டீசல் மற்றும் பெட்ரோல் மீதான சுங்க வரி ரூ. 3 ம், மே மாதம் 5 - ம் தேதி பெட்ரோல் மீது 10 ரூபாயும் டீசல் மீது 13 ரூபாயும் சுங்க வரி உயர்த்தப்பட்டது. இந்த வரி விதிப்பால் மட்டும் மத்திய அரசுக்கு சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கூடுதலாக வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில்  கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் பரவுவதால், மீண்டும் கச்சா எண்ணெய்த் தேவை குறைவதன் எதிரொலியாக, அதன் விலையும் குறைந்துள்ளது. பிரென்ட் (Brent ) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 42.04 டாலராகவும், அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 39.72 டாலராகவும் விற்பனையாகிறது. கடந்த வாரம் விலை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை இத வாரம் இறங்குமுகத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்தியாவில் எண்ணெய் மற்றும் டீசல் விலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. எப்போது குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments