நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி..! விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்

0 3158

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று என வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவரும் விக்னேஷ் சிவனும் தனிமைப்படுத்திக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ செயலி ஒன்றின் மூலம் குழந்தைகள் போன்ற தோற்றத்தில் தானும், நயன்தாரவும் நடனமாடும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், தங்களை பற்றியும், கொரோனாவை பற்றியும் வெளியாகும் நகைச்சுவையான செய்திகளை பார்க்க கடவும் போதுமான ஆரோக்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments