மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000 கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

0 1774

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 லட்சத்து 35ஆயிரம் பேருக்குத் தலா ஆயிரம் ரூபாயை அவர்களின் வீட்டிலேயே வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள், நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் படிவத்தில் விவரங்களை அளித்து, தேசிய அடையாள அட்டையின் அசலைக் காட்டி, நகலை ஒப்படைத்து ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாகவே பயனாளிக்கு வழங்க வேண்டும்.

உதவித் தொகையை மாற்றுத் திறனாளிகள், பெற்றோர், அல்லது சிறப்புச் சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். இந்த உதவி மறுக்கப்பட்டால் அல்லது கிடைக்கவில்லை எனில் மாநில அளவிலான உதவி மைய எண் 18004250111 ஐத் தொடர்புகொள்ளலாம் என மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments