மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவிப்பது குறித்து பரிசீலனை என தகவல்

0 18840
மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு?

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களுக்குரிய மாவட்ட ஆட்சியர்களோடு மாவட்டங்களின் நிலவரம் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். அதில் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவித்தால் கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும் என பரிந்துரைகள் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பரிந்துரைகளை ஏற்று கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களுக்கு, முழு ஊரடங்கு அறிவிக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments