இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்.. 445 பேர் கொரோனாவுக்கு பலி..!

0 2246
நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.25 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 821 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 387 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்து 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா பாதிப்புகள் அடிப்படையில் கடந்த சில நாட்களாக மூன்றாமிடத்தில் இருந்து வந்த டெல்லி, தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 59 ஆயிரத்து 746 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 59 ஆயிரத்து 377 பேரும், குஜராத்தில் 27 ஆயிரத்து 260 பேரும், உத்தரபிரதேசத்தில் 17 ஆயிரத்து 731 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் ராஜஸ்தான், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments