'இந்தியா இறந்த வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கிறது... ஆனால் நாம்?' - வெய்போவில் சீனர்கள் புலம்பல்!

0 48255

கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலில் இந்திய சீன தரப்பின் இரு பக்கமுமே உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சீன தரப்பில் 35 பேருக்கு அதிகமானோர் பலியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சீன விடுதலை ராணுவம் தங்கள் வீரர்கள் உயிரிழப்பு பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. இதனால், சீன மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கால்வன் மோதல் குறித்து எந்தவொரு தகவலையும் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரிவிக்க சீன வீரர்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து கூட, குடும்பத்தினருக்கு தெரிவிக்க தடை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தள பக்கமான வெய்போவில் இது குறித்து சீன மக்கள் அந்த நாட்டு அரசிடத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.வெய்போவில் பகிரப்பட்டுள்ள ஒரு பதிவில், இந்திய தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அந்த நாட்டு அரசு மக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். கால்வன் மோதலில் உயிரிழந்த இந்திய படை வீரர்களுக்கு அந்த நாடு ஒன்றிணைந்து மரியாதை செலுத்துகிறது. தேசமே ஒற்றுமையுடன் கண்ணீர் சிந்துகிறது. இறந்த படை வீரர்களுக்கு உரிய மரியாதையை அந்த நாடு அளிக்கிறது. ஆனால், இங்கே நிலை என்ன? நமது வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூடிய வாய்ப்பு கூட நமக்கு கிடைக்கவில்லை. இந்தியாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஏராளம் என்று கூறப்பட்டுள்ளது. 

மற்றோரு பதிவில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நிலைமை குறித்து நான் கவலை கொண்டுள்ளேன். வெளிநாட்டு செய்திகளின் வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளில் இருந்து, நான் மிகவும் கவலைப்படுவது மக்கள் விடுதலை இராணுவத்தின் இளம் வீரர்களைப் பற்றியதுதான். ஏனென்றால், அவர்களை பற்றி குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. உயிரிழப்புகள் உள்ளதா என்பது பற்றிய தகவல்களும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. (புகைப்படங்களுடன் 20 இந்திய வீரர்கள் இறந்ததை இந்தியா அறிவித்துள்ளது), நமது சீன எல்லைப் படையினரும் இளைஞர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பெற்றோரும் இருப்பார்கள். அந்தப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்” என்று சொல்லப்பட்டுளளது.

இதுபோன்ற ஏராளமான பதிவுகளை வெய்போவில் பார்க்க முடிகிறது. ஆனால், கம்யூனிஸ நாடானா சீனாவில் ராணுவம் குறித்த தகவல்களை பெரும்பாலும் வெளியே சொல்வதில்லை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments