பல்கேரிய டென்னிஸ் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1191

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 19-வது நிலை வீரரான பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மொனோகாவில் இருந்து திரும்பிய பிறகு தனக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடனும் கொரோனா பரிசோதனைகள் செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் மீண்டு வருவதாகவும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ள டெமிட்ரோவ், ஒரு வாரத்திற்கு முன்பாக உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments