சென்னையை குளிர்வித்த மழை..!

0 1396

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் நேற்றிரவு பெய்த பலத்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தது. இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அசோக்நகர், தியாகராயநகர், மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.  நேற்று பகலில் கடுமையான புழுக்கம் காணப்பட்ட நிலையில், மழையால் இதமான சூழல் நிலவியது.

காஞ்சிபுரத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் அரை மணி நேரத்திற்கும் மழை பெய்தது. வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம்,சின்னையன் சத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு பேருந்து நிலையம்,பூக்கடை, சத்திரம் ஒளி, முகமது பேட்டை,குருவிமேடு, பொன்னேரிகரை, வெள்ளைகேட்  உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிபூண்டி,ஆரம்பாக்கம்,பொன்னேரி,சோழவரம்,ஜனபசத்திரம்,மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

இதற்கிடையில் தமிழகம், புதுச்சேரியில் நாளை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments