"சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வைப் பகிர வேண்டாம்"- ரத்தன் டாடா கோரிக்கை

0 6487

சமூக வலைதளங்களில் மக்கள் வெறுப்புணர்வையும், பிறர் மனதை புண்படுத்தும் வகையிலான வசைச் சொற்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வருடம் அனைவருக்கும் மிகவும் சவால் நிறைந்ததாக அமைந்துள்ள நிலையில்,  ஒருவருக்கொருவர் உதவியாகவும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களை காயப்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் இடையே நல்ல புரிதலும், அதிக அன்பும், அதிக பொறுமையும் தற்போது தேவைப்படுகிறது எனவும், அரவணைப்பும், ஊக்கமும் நிறைந்த தளமாக சமூக வலைதளங்கள் மாறும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments