மாலத்தீவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்கள்..!

0 710

மாலத்தீவுகளில் சிக்கிய இந்தியர்கள் 198 பேருடன்  கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத் தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வந்தேபாரத் திட்டத்தில் சமுத்திர சேது திட்டம் ஒரு அங்கமாகும். கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 4 சுற்றுகளில் 2874 பேர், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்டத்தின் முதல் சுற்றில் ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் மாலத்தீவின் மாலே துறைமுகத்தில் இருந்து, 198 இந்தியர்களுடன் தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments