"கொரோனா சூழலில் பிராணாயாமத்தின் தேவையை உலகம் உணர்ந்துள்ளது"-பிரதமர் மோடி

0 1011

யோகாசனம், மக்களை ஒன்றுபடுத்துவதாகவும், பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி சுவாச மண்டலத்தைப் பாதுகாக்கச் சிறந்ததாகும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் நாள் உலகம் யோகாசன நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் வீட்டிலேயே குடும்பத்துடன் யோகாசனம் செய்வது எனப் பிரதமர் தெரிவித்தார்.

கொரோனா பரவி வரும் இந்தச் சூழலில் யோகாசனப் பயிற்சி செய்வதன் தேவையை உலகம் மிகத் தீவிரமாக உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு ஆசனங்கள் நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகப்படுத்துவதாகக் கூறிய அவர், பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி சுவாச மண்டலத்தைப் பாதுகாக்கச் சிறந்ததாகும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments