பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 15ஆவது நாளாக உயர்வு..!

0 1482

பெட்ரோல், டீசல் விலை 15ஆவது நாளாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 ரூபாய் 27 காசாக இருந்தது. அந்த விலை இன்று 82 ரூபாய் 58 காசாக அதிகரித்துள்ளது.

இதேபோல் நேற்று 75 ரூபாய் 29 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை இன்று 75 ரூபாய் 80 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கால் விலையை நாள்தோறும் மாற்றியமைத்ததை 82 நாள்கள் நிறுத்தி வைத்திருந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 7ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த 6ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில், 15 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 4 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 58 காசுகளும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments