சர்வதேச யோகா தினம் வீடுகளிலேயே யோகா..!

0 605

சர்வதேச யோகா தினம் இசன்று கொண்டாடப்படும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளிலேயே யோகா செய்தனர்.

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் யோகா தினம், நடப்பாண்டில் கொரோனா அச்சம் காரணமாக பெரியளவில் எவ்வித யோகா நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடும் செய்யவில்லை. ஆனாலும் பொதுமக்கள் தத்தமது வீடுகளிலேயே யோகா செய்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் யோகா செய்தார். 

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் யோகா செய்தனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோரும் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி யோகா செய்தனர். 

ஸ்ரீநகரில் இந்திய ராணுவத்தின் ஜம்மு - காஷ்மீர் லைட் இன்பண்ட்ரீ படைப்பிரிவினர் யோகா செய்தனர். 

வடக்கு சிக்கிம் பகுதியில் 18 ஆயிரத்து 800 அடி உயரத்தில் இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்பு படை போலீசார் யோகா செய்தனர். 

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகிலுள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியான வசுதரா பனிமலை பகுதியில் 14 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் யோகா செய்தனர். அதே போல் அம்மாநிலத்தின் ஆலி மலைப்பகுதியில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசார் யோகா செய்தனர். 

அதே போல் லடாக்கில் திபெத் எல்லையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்தனர்.

லடாக்கின் லே பகுதியிலுள்ள தீக்சே மடத்தில் புத்த பிக்குகளுடன் இணைந்து, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசார் யோகா செய்தனர். 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் யோகா குரு பாபா ராம்தேவ் யோகா செய்தார். 

கர்நாடக மாநிலம் கலாபுராகியிலுள்ள பூங்காவில் குறைந்தளவில் கூடிய மக்கள், தனிநபர் இடைவெளியுடன் யோகா செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments