கொரோனா தாக்கி விஜயா மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு

0 37715

கொரோனா வைரஸ் தாக்கி தமிழகத்தில் சில பிரபலங்கள் பலியாகி வருவது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணம் படைத்தவர்களுக்கே இந்த நிலையென்றால், சாமானிய மக்களின் நிலை என்ன கேள்வியையும்  இத்தகைய இறப்புகள் எழுப்பியிருக்கின்றன. 

தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல். ராகவன் ஆகியோர் சமீபத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்,  மற்றோரு பிரபலமான சரத்ரெட்டியும் நேற்று கொரோனா தாக்கி இறந்து போனார். இவர், வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர் ஆவார். பிரபல படத் தயாரிப்பாளரும் வாகினி ஸ்டுடியோவின் நிறுவனருமான நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டியின் இரண்டாவது  மகன் இவர். தற்போது, 52 வயதான இவரை கொரோனா வைரஸ் தாக்கியதையடுத்து, கடந்த சில தினங்களாக விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சரத் ரெட்டி உயிரிழந்தார். சரத் ரெட்டியின் உடலை சுகாதாரத்துறையினரே அடக்கம் செய்தனர்.

அதேபோல பார்சன்ஸ் சுந்தரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயண்சாமி பாலகிருஸ்ணனும் கொரோனா தாக்கி உயிரிழந்தார். சுந்தரம் பாஸ்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 12 ஆண்டுகளாக இவர், பணியாற்றி வந்தார். சென்னை ஐ.ஐ.டியில் எம். டெக் பட்டம் பெற்ற இவர் , முன்னதாக பாரத் போர்ஜ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2008- ம் ஆண்டு சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனத்தில் இவர் பணிக்கு சேர்ந்தார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். தங்கள் சொத்து போன்று திகழ்ந்த ஒருவரை இழந்து விட்டதாக சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments