ஆந்திராவிலும் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து என அறிவிப்பு

0 1100

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆந்திராவில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முதற்கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்தன. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திலும் 10ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அடிமுலாப்பு சுரேஷ் அறிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments