கல்வான் பள்ளத்தாக்கு முழுவதற்கும் உரிமை கோரிய சீனாவுக்கு இந்தியா வன்மையான மறுப்பு

0 7432

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் தங்களுக்குரியது என்று சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வன்மையாக மறுப்பு தெரிவித்துள்ளது.

வரலாற்று ரீதியாகவும் அது கடந்த கால நடைமுறைப்படியும் ஏற்க முடியாதது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. LAC எனப்படும் எல்லைக் கோடு பகுதியில் இந்தியாவின் நிலங்களுக்கு சீனா இறையாண்மை கோரி வருகிறது.

20 இந்திய வீரர்கள் சீனாவின் தாக்குதலால் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து முழு இடத்துக்கும் முதன் முறையாக சீனா உரிமை கோரியது . இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை சீனாவின் உரிமை கோரும் விவகாரம் மிகைப்படுத்தப்பட்டது என்று நிராகரித்துள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இந்திய படையினர் இந்திய சீன எல்லையின் அனைத்துப் பகுதிகளையும் நன்கு அறிவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைக் கோடு அருகே இந்தியா எந்த வித ராணுவ நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி எல்லைப் பகுதிகளில் அமைதி நீடிக்க சீனா ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments