எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு முழு சுதந்திரம், ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தடையில்லை

0 3888

அசாதாரணமான சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து ஆயுதங்களைப் பிரயோகிக்க ராணுவத்திற்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தின் போது இந்திய வீரர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

ஆனால் எல்லையில் இருக்கும் வீரர்கள் எப்போதும் ஆயுதங்களுடன் தான் இருப்பார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் எல்லையை காக்கும் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் போது தெரிவித்தார்.

இதனை ஆமோதித்துள்ள இந்திய ராணுவ உயரதிகாரிகள் எல்லையில் ஆயுதங்கள் கொண்டு செல்ல வீரர்களுக்கு அனுமதி உள்ளதாகவும், கல்வான் தாக்குதல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் ஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments