சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தளர்வுகளின்றி இன்று முழு ஊரடங்கு...

0 3313

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஊரடங்கு முழுமையாக எந்தவிதத் தளர்வும் இல்லாமல் கடைபிடிக்கப்படுகிறது. இன்று மருந்துக் கடைகள் தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படாது .

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முழு நேர பொது முடக்கம் அமலுக்கு வந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சில அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 2 மணிவரை காய்கறிகள், மளிகைக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

ஆயினும் இன்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 28ம் தேதியும் முழு ஊரடங்கு தளர்வுகள் இன்றி கடைபிடிக்கப்படுகிறது. இன்று மருந்துக் கடைகள், பால் நிலையங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்துக் கடைகள் , ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவை போன்றவை தவிர இதர பணிகள் வேறு எந்த வகையிலும் செயல்பட அனுமதியில்லை.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள், பாலங்கள், மேம்பாலங்களை போலீசார் தடுப்புகளால் மூடி வைத்துள்ளனர்.

நாளை காலை 6 மணி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும். நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments