ராணுவ வீரர்களை தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது காங்கிரஸ்: பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

0 1465

இந்திய ராணுவ வீரர்களை காங்கிரஸ் தன்னம்பிக்கை இழக்க செய்து வருவதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் நேரிட்ட  மோதல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய பாஜக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், டெல்லியில் இருந்து ராஜஸ்தான் பாஜகவினருக்கு காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக ஜே.பி. நட்டா உரையாற்றியபோது பதிலளித்தார்.

அப்போது அவர், ட்விட்டரில் கேள்வியெழுப்பி ராணுவ வீரர்களை காங்கிரஸ் தலைவர்கள் தன்னம்பிக்கை  இழக்க செய்து வருவதாக  குற்றம்சாட்டினார்.  மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரையே மதிக்காதவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் என ஜே.பி. நட்டா தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments