துளி கூட சீன பங்களிப்பு இல்லை... இந்திய வீரர்களுக்கு , குண்டு துளைக்காத, 'சர்வத்ரா கவசம்' ரெடி

0 24343

ந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு, சீன பொருள்கள் எதுவுமின்றி 100 % உள்நாட்டுப் பொருள்களைக் கொண்டு  'சர்வத்ரா கவசம்' என்று பெயரிடப்பட்டுள்ள முழு உடல் கவச உடை  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை, கள பரிசோதனைக்குத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத்தின்  கட்டுப்பாட்டில் இந்த நவீன உடை  ஆராய்ச்சி செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது   துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த ராணுவ மேஜர் அனூப் மிஸ்ராவின் மேற்பார்வையில் 'சர்வத்ரா கவச ' உடை  தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்துவித துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து  கழுத்து, உடல், மேல் கைகள், இடுப்பு மற்றும் தொடை ஆகிய  உறுப்புகளைப் பாதுகாக்கும் விதத்தில் இந்த உடை நவீனமாக  உருவாக்கப்பட்டுள்ளது.  

image

"தற்போது இந்தக் கவசம் உருவாக்கப்பட்டு களப் பரிசோதனைக்குத் தயார் நிலையில் இருக்கிறது" என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சர்வத்ரா கவச உடை  எடை குறைவாக, நீர் புகா வண்ணம், அகச்சிவப்புக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும் படி தயாரிக்கப்பட்டுள்ளது.  உலகின் பிற நவீன உடைகளுடன்  ஒப்பிடுகையில் நீண்ட நேரம் காலம் உழைக்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் மற்ற நாடுகள் பயன்படுத்தும் உடல் கவசங்களுடன் ஒப்பிடுகையில் எடை குறைவாக, 50 சதவிகிதத்துக்கும் குறைவான செலவில் உற்பத்தி செய்யப்படுவது இதன் சிறப்பம்சம்.

'மேட் இன் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கவச உடையில் முழுக்க முழுக்க இந்திய மூலப்பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகில் ஒரு சில நாடுகளே முழு உடல் கவச ஆடைகளை தயாரித்திருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் சேர்ந்திருக்கிறது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments