கோழிகளுக்கு கொரோனா தொற்று எனச் சமூக வலைத்தளத்தில் பரவிய செய்தி - ம.பி. அரசு மறுப்பு

0 1930

கோழிகளுக்கு கொரோனா பரவியுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை மத்தியப் பிரதேச அரசு மறுத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பண்ணைகளில் உள்ள கோழிகளை நலவாழ்வுத்துறையினர் பரிசோதித்தபோது, அவற்றுக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இந்தச் செய்தி அடிப்படையற்றது எனக் கால்நடைப் பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. கோழியிறைச்சியை உணவாகக் கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், அதனால் கொரோனா தொற்று பரவாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. கோழிகளுக்கு கொரோனா உள்ளதா என்பது குறித்து ஓரிடத்திலும் மாதிரி ஆய்வு நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments