புதுச்சேரியில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதி

0 1398

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள், 2 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து, புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 338ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இருந்து வருவோர் மூலமாகவே புதுச்சேரியில் தொற்று பரவி வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தூய்மை பணிக்காக புதுச்சேரி சட்டப்பேரவை 2 நாட்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள்களும் சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments