43 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த 90 வயது மூதாட்டி

0 1475

மத்தியபிரதேசத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் கூகுள், வாட்ஸ் அப் வாயிலாக 43 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்திலுள்ள கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி, ஊரடங்கின் போது ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது தனது பூர்விகம் குறித்த தகவல்களை அவர் வசித்த வந்த குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

அதனை வைத்து கூகுளில் தேடிய போது மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த கஞ்சன் நகர் கிராமமும், அங்குள்ள கடையொன்றின் தொடர்பு எண்ணும் கிடைத்துள்ளது.

அந்த கடை உரிமையாளர் மூலம் மூதாட்டியின் புகைப்படத்தை கஞ்சன் நகர் கிராமத்தில் வாட்ஸ் அப் மூலம் பரப்பிய நிலையில், மூதாட்டியின் பேரன் தனது பாட்டியை அடையாளம் கண்டு அழைத்து சென்றுள்ளார். மூதாட்டி பன்ச்சுபாயின் (Panchubai) கணவரும், மகனும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், 43 ஆண்டுகள் கழித்து தனது பேரனுடன் இணைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments