சீனப் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சிவ்ராஜ் சிங் செளஹான்

0 1062

சீனப் பொருள்களை புறக்கணிக்கும்படி நாட்டு மக்களை பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதலமைச்சருமான சிவ்ராஜ் சிங் செளஹான் கேட்டுக் கொண்டுள்ளார். லடாக்கின் கிழக்கு பகுதியிலுள்ள கால்வன் பள்ளத்தாக்கில் அண்மையில் சீன படையினருடனான கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அந்நாட்டு பொருள்களை புறக்கணிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரெவாவில் (Rewa) செய்தியாளர்களிடம் பேசிய சிவ்ராஜ் சிங் செளஹான், எல்லையில் சீனப்படையினருக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும், இதேபோல் சீன பொருளாதார வலிமையை உடைத்தெறிய, அந்நாட்டு பொருள்களை புறக்கணித்து இந்திய பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments