இந்தியாவின் எல்லையில் சீனப் படைகளின் அடாவடித்தனம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கடும் கண்டனம்

0 8606

அண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக எல்லையை கைப்பற்ற முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் எல்லையில் பதற்றத்தை சீன ராணுவம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய எல்லையில் சீனா உரிமை கோருவது நியாயமற்றது என்றும் பாம்பியோ சாடியுள்ளார்.

டென்மார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இணையம் வாயிலாக வாஷிங்டனிலிருந்து பேசிய மைக் பாம்பியோ, தென் சீனக் கடல் பகுதியிலும் சீனாவின் கடற்படையினர் ஆக்ரமிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதனால் கூடுதலான இடத்தை ஆக்ரமித்து கடல் எல்லையை அதிகப்படுத்த சீனா முயற்சித்து வருவதாக பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments