ஊரடங்கு காலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்-அரசுக்கு கமல் கேள்வி

0 2137

ஊரடங்கு காலத்தில் அரசு என்ன தடுப்பு நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒட்டு மொத்த தமிழகமும் இரண்டரை மாத ஊரடங்கில் இருந்து, மீளத் தொடங்கியிருப்பதாகவும், ஆனால் ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று காலம் நீள்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்..

பரவலான பரிசோதனையை எல்லா மாவட்டத்திலும் செய்து, உண்மை நிலையை தெளிவுபடுத்தியிருந்தால், கொரோனாவிலிருந்து தப்பிக்க, சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மக்களின் மனநிலையைத் தவிர்த்திருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஊரடங்கு காலத்திலாவது அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments