இந்திய ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு மதுவகை விற்பனை நிறுத்தம்

0 3406

உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்த நிலையில் இந்திய ராணுவ கேன்டீன்கள் வெளிநாட்டு மதுவகைக்கான ஆர்டர்களை நிறுத்தியுள்ளன. ராணுவ கேன்டீன்களில் இந்திய மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் ராணுவ வீரர்களுக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவின் சுயசார்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் பெர்னார்டு ரிகார்டு மற்றும் டியாஜ்ஜியோ ஆகிய இரு வெளிநாட்டு மதுபான நிறுவனங்கள் வழக்கமாக மாதந்தோறும் 6 முதல் 12 பாட்டில்கள் கொண்ட 4500 முதல் 5000 பெட்டிகளுக்கான ஆர்டர்களை இந்திய ராணுவ கேண்டீன்களிடம் இருந்து பெற்று வந்த நிலையில் மே மாதத்தில் ஒரு ஆர்டர் கூட கொடுக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments