நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 10,386 பேர் குணமடைந்துள்ளனர் - மத்திய அரசு

0 1461

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் விகிதம் 53 புள்ளி 79 சதவீதமாக (53.79%) அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையுடன், குணமாவோர் எண்ணிக்கையை ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் நாள்தோறும் அத்தொற்றிலிருந்து குணமாவோர் விகிதத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமாவோர் விகிதம் 52 புள்ளி 95 சதவீதமாக மேம்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து இருப்பதாகவும், இதனால் குணமாவோர் விகிதம் 53 புள்ளி 79 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments