கொரோனாவால் இறந்தவரின் உடலை தொட்டு அழ முடியாத நிலை - நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி

0 1161

கொரோனா வைரஸால் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, இறந்தவரின் மனைவி, குழந்தைகள் சடலத்தை கட்டி அழத் துடிக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.

மருத்துவமனையில் இருந்து உடலை ஆம்புலன்சில் ஏற்ற முயன்ற போது, குடும்பத்தினர் உடலை கட்டிப்பிடிக்க முயன்றனர். அருகில் நின்ற உறவினர்கள் அவர்களை தடுத்தனர்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. கொரோனா தாக்கினால் குடும்பத்தினரை கூட அருகில் அனுமதிக்காமல் உலக சுகாதார அமைப்பு வழிக்காட்டுதல் படி அடக்கம் செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடலை அருகில் சென்று தொடாத வரை தொற்று பரவாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் இறுதி ஊர்வலம் தவிர்க்கப்பட்டு, இறுதி சடங்கிற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments