நாட்டின் மின்னுற்பத்தி ஜூன் முதல் பாதியில் 14.5 சதவீதமாக வீழ்ச்சி

0 1009

இந்தியாவின் மின்னுற்பத்தி ஜூன் முதல் பாதியில் 14 புள்ளி 5 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மார்ச் இறுதி வாரத்தில் இருந்தே மின் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது.

மத்திய மின்தொகுப்பின் கீழ் செயல்படும் போசோகோ நிறுவனம் மின்னுற்பத்தி, மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மே மாதத்தில் மின்னுற்பத்தி அளவு 14 புள்ளி 3 விழுக்காடும், ஜூன் முதல் பாதியில் 14 புள்ளி 5 விழுக்காடும் குறைந்துள்ளது.

மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்தில் மின் பயன்பாடு 24 விழுக்காடு குறைந்துள்ளது. ஏப்ரலில் மின் பயன்பாடு முறையே 14 மற்றும் 18 விழுக்காடு குறைந்துள்ளது.

டெல்லியில் மே மாதத்தில் 26 புள்ளி 7 விழுக்காடும், ஜூனில் 30 விழுக்காடும் மின் பயன்பாடு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மே மாதத்தில் எட்டரை விழுக்காடும், ஜூனில் 15 புள்ளி 3 விழுக்காடும் மின் பயன்பாடு குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments