நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், நடிகை உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

0 3295

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து அவரது தோழியும் இந்தி நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்திய மும்பை போலீசார், படத் தயாரிப்பு நிறுவனத்திடம் அவர் நடிக்க கையெழுத்திட்ட பட ஒப்பந்தம் தொடர்பான நகலை கோரியுள்ளனர்.

மும்பை பாந்த்ரா வீட்டில் தூக்கிட்டு சுசாந்த் அண்மையில் தற்கொலை செய்தது குறித்து பெண் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி மற்றும் வர்த்தக மேலாளர் ஸ்ருதி மோடி, ராதிகா நிஹலானி (Shruti Modi and Radhika Nihalani) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சுசாந்த் நடிக்க ஒப்பந்தமான புதிய படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பு நிறுவனத்திடம், சுசாந்த் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் நகலை கோரியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தால்தான் வேறு படத்தில் சுசாந்த்தால் நடிக்க முடியவில்லை எனத் தகவல் வெளியானதால், அதில் உள்ள விவரங்களை அறிய முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதேபோல் மேலும் 3 தயாரிப்பு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments