மாநிலங்களவைக்கு 20 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

0 734

மாநிலங்களவைக்கு 9 மாநிலங்களில் இருந்து 20 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.

குஜராத், ஆந்திர மாநிலங்களில் தலா 4 உறுப்பினர்களும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 உறுப்பினர்களும், ஜார்க்கண்டில் 2 உறுப்பினர்களும், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா மாநிலங்களில் தலா ஒரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்க்கட்சித் தலைவர் கமல்நாத் ஆகியோர் வாக்களித்தனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கமல்நாத் வீட்டில் இருந்து பேருந்துகளில் சட்டமன்றத்துக்கு வந்து வாக்களித்தனர். ராஜஸ்தானில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசுப் பேருந்துகளில் சட்டமன்றத்துக்கு வந்து வாக்களித்தனர்.

குஜராத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேசரி சிங் ஜேசங்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்தார். ஆந்திரத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments