ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை நடவடிக்கை

0 3330

ரஷ்யாவிடம் இருந்து 33 புதிய போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மத்திய அரசிடம் விமானப்படை முன்வைத்துள்ளது. இந்தியா, சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மிக் 29 ரகத்தைச் சேர்ந்த 21 போர் விமானங்கள், சுகோய் 30 எம்.கே.ஐ.எஸ்.(Su-30MKIs) ரகத்தைச் சேர்ந்த 12 போர் விமானங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இந்திய விமானப்படை வைத்துள்ளது.

சுமார் 6 ஆயிரத்து 180 கோடி ரூபாய் ($810 million) மதிப்புக் கொண்ட இந்தத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அந்த போர் விமானங்கள், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், விமானப்படை புதிய திட்டத்தை முன்வைத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments