நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 13-வது நாளாக அதிகரிப்பு

0 1311

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 13-வது நாளாக அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்வை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இதனால் கடந்த 12 நாட்களாக ஏறுமுகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. 13 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாய் 28 காசுகளும், டீசல் 6 ரூபாய் 55 காசுகளும் அதிகரித்துள்ளன.

சென்னையில் நேற்று 81 ரூபாய் 32 காசுகளாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 50 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோன்று, நேற்று 74 ரூபாய் 23 காசுகளாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை 54 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments