19 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது

0 2041

ஒன்பது மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 19 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத், ஆந்திராவில் தலா நான்கு இடங்கள், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தலா மூன்று இடங்கள், ஜார்க்கண்டில் இரண்டு இடங்கள், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்.

குஜராத்தில் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ளதால் அக்கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 2 வேட்பாளர்களும் வெல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகளின் குதிரை பேரம் அச்சம் காரணமாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பான சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வின் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசின் திக்விஜய்சிங், வேணுகோபால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

245 இடங்களைக் கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு 75 உறுப்பினர்கள் உள்ளனர். இத்தேர்தலுக்குப் பின் பா.ஜ.க.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டணியின் பலமும் 100ஐ நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments