முழு ஊரடங்கு - வங்கிச் செயல்பாடு பற்றி அறிவிப்பு..!

0 4892

சென்னையிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், இன்றியமையாச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்காக வங்கிக் கிளைகள் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான வங்கியாளர் குழு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தும் பகுதிகளில் ஜூன் 19 முதல் 26 வரை பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 33 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு வங்கிகள் செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நாட்களில் இன்றியமையாச் சேவையில் ஈடுட்டுள்ள நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பொதுமக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.

ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் வழக்கமான பணி நேரங்களில் வங்கிகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது. அனைத்து ஏடிஎம்களும், பணம் செலுத்தும் எந்திரங்களும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments