சவூதி நிறுவனம் ஜியோவில் ரூ. 11,367 கோடி முதலீடு..!

0 2116

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 11 ஆயிரத்து 367 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சவூதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவனம் 11 ஆயிரத்து 367 கோடி ரூபாய் முதலீடு செய்து இரண்டு புள்ளி மூன்று இரண்டு விழுக்காடு பங்குகளை வாங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இத்துடன் சேர்த்துக் கடந்த ஒன்பது வாரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பதினொரு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

11 நிறுவனங்களும் மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 694 கோடி ரூபாய் முதலீடு செய்து ரிலையன்ஸ் ஜியோவில் ஒட்டுமொத்தமாக 24 புள்ளி 7 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளன. இவற்றில் அதிகப்பட்சமாக பேஸ்புக் நிறுவனம் 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய் முதலீடு செய்து ஒன்பது புள்ளி ஒன்பது ஒன்பது விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments